ஷண்முகா இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் தங்களது கலாச்சார ஆடைகளை அணிவதற்கு ஆட்சேபம் தெரிவித்த கல்லூரியின் அதிபருக்கும் நிர்வாக சபைக்கும் எதிராக மனித உரிமை ஆணையகத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளால் சென்ற மாதம் 21ம் திகதி முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மனித உரிமை ஆணையகம் ஷண்முகா இந்துக் கல்லூரியின் அதிபரிடம் விளக்கம் கோரி அது சம்பந்தமான அறிக்கையை எதிர்வரும் ஆறாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாடசாலை அதிபரை மனித உரிமை ஆணையகம் பணித்துள்ளது.
இதன் அடுத்த கட்டமாக உச்ச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
குரல்கள் இயக்கம் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளோடு இவ்விடயத்தில் துரிதமாக இணைந்து செயற்பட்டுக் கொண்டிருப்பதோடு ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறது.
no replies