கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்கல்லு என்ற இயற்கைவளம் கொழிக்கும் இடத்தில் கொட்டுவதற்கு மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சிவில் சமூகத்தினரால் புத்தளத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இன, மத கட்சி, வயது வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த திட்டத்திற்கு எதிரான. தொடர்ச்சியாக எட்டாவது நாளாக சத்தியகிரக போராட்டம் புத்தளத்தில் உள்ள கொழும்பு முக திடலில் நடைபெற்று வருகிறது.இவ்வாறு பாகுபாடுகள் இன்றிய மக்கள் போராட்டம் , இலங்கைக்கு புதியதொரு முன்மாதிரியையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது […]
muslims
Shamuga Habaya Crisis-Complaint to Human Rights Commission
ஷண்முகா இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் தங்களது கலாச்சார ஆடைகளை அணிவதற்கு ஆட்சேபம் தெரிவித்த கல்லூரியின் அதிபருக்கும் நிர்வாக சபைக்கும் எதிராக மனித உரிமை ஆணையகத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளால் சென்ற மாதம் 21ம் திகதி முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மனித உரிமை ஆணையகம் ஷண்முகா இந்துக் கல்லூரியின் அதிபரிடம் விளக்கம் கோரி அது சம்பந்தமான அறிக்கையை எதிர்வரும் ஆறாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாடசாலை அதிபரை மனித உரிமை ஆணையகம் பணித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக உச்ச […]
Media Statement on Kandy Riot
2018.03.12 கடந்த சில வருடங்களாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரங்களும் திட்டமிட்ட வன்முறைகளும் சில பேரினவாத இனவாத குழுக்களால் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. முஸ்லிம்களின் கலாச்சார விடயங்கள், மத ஸ்தாபனங்கள், பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் இருப்பு என்பன இந்த இனவாத குழுக்களின் இலக்குகளாக இருந்து வந்திருக்கிறன. தொடர்ச்சியான இனவாத செயல்பாடுகளின் ஒருபகுதியாக சென்ற பெப்ரவரி மாதம் 26ம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாரையில் முஸ்லீம் உணவகங்களில் சிங்களவர்கள் கர்ப்பம் தரிப்பதைத் தடுப்பதற்கான மருந்துகள் கலக்கப்படுகின்றன […]
Kandy Riot – Field visit to Kandy district
கண்டி கலவரைத்தைத் தொடர்ந்து கள ஆய்வுகளுக்காக குரல்கள் இயக்கத்தின் ஆய்வுக்குழுவினர் சென்ற 10ம் திகதி சனிக்கிழமை கண்டிக்கு இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டனர். குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள்,இழப்பீடு அளவிடும் பொறியிலாளர்கள், புகைப் படப்பிடிப்பாளர்கள் மற்றும் கள ஆய்வாளர்களைக் கொண்ட குழு பாதிக்கப்பட்ட இடங்களான திகண,அக்குறணை,கடுகஸ்தொட போன்ற பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தகவல்களைத் திரட்டியதோடு பாதிக்கப்பட்ட மக்களோடும் கலந்துரையாடினர். பொலீசில் முறைப்பாடு செய்வது,அவற்றின் பிரதிகளைப் பெறுவது,முறைப்பாடு செய்வதற்கான வழிகாட்டல்கள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று 2018-03-11 ஞாயிறன்று திகண […]
Ampara Riot- what happened in the Court yesterday by Radheef Ahamed LLB,AAL (Tamil)
Field visit to Gintota
ஜிந்தோட்டை இனக்கலவரத்தைத் தொடர்ந்து குரல்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் விபவரங்களைத் திரட்டுவதற்காகவும்,பாதிக்கப்பட்டவர்களின் நேரடிச் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் சென்ற ஞாயிறு (2017.11.27) ஜிந்தோட்டைக்கு விஜயம் செய்தனர். குரல்கள் இயக்கத்தின் உறுப்பினர்களான சட்டத்தரணி றதீப் அஹமட் மற்றும் ஊடகவியலாளர் றிஸ்வான் சேகு முஹைதீன் ஆகியோர் கள விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை குரல்கள் இயக்கம் தனித்தனியே சந்தித்ததோடு அவர்களின் வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டன.சொத்திழப்பிற்கான மதிப்பீடுகளும் பெறப்பட்டன. இந்த இனக்கலவரத்திற்குஅடிப்படைக்காரணமாக இருந்த ஒரு விபத்தில் […]