Kandy Riot – Field visit to Kandy district

கண்டி கலவரைத்தைத் தொடர்ந்து கள ஆய்வுகளுக்காக குரல்கள் இயக்கத்தின் ஆய்வுக்குழுவினர் சென்ற 10ம் திகதி சனிக்கிழமை கண்டிக்கு இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டனர்.

குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள்,இழப்பீடு அளவிடும் பொறியிலாளர்கள், புகைப் படப்பிடிப்பாளர்கள் மற்றும் கள ஆய்வாளர்களைக் கொண்ட குழு பாதிக்கப்பட்ட இடங்களான திகண,அக்குறணை,கடுகஸ்தொட போன்ற பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தகவல்களைத் திரட்டியதோடு பாதிக்கப்பட்ட மக்களோடும் கலந்துரையாடினர்.

பொலீசில் முறைப்பாடு செய்வது,அவற்றின் பிரதிகளைப் பெறுவது,முறைப்பாடு செய்வதற்கான வழிகாட்டல்கள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று 2018-03-11 ஞாயிறன்று திகண ஜும்மாப்பள்ளிவாயலில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி முஹைமின் காலித் மற்றும் அஸ்ஹர் லதீப் ஆகியோரால் நடத்தப்பட்டது.

இழப்பீடு அளவீடுகள் சம்பந்தமான ஆலோசனைகளும் நடவடிக்கைகளும் பொறியியலாளர்களான ஜௌஸி,காமில் மற்றும் பஸீல் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.

கள ஆய்வில் குரல்கள் இயக்கத்தின் பல்கலைக் கழக மாணவர்களும் மற்றும் பல தன்னார்வச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் குரல்கள் இயக்கத்தின் ஆய்வுக்கு தற்போது ஈடுபட்டு வருகிறது.

no replies

Leave your comment