Media Statement – On Puttalam Aruwakkal protest

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்கல்லு என்ற இயற்கைவளம் கொழிக்கும் இடத்தில் கொட்டுவதற்கு மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சிவில் சமூகத்தினரால் புத்தளத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இன, மத கட்சி, வயது வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த திட்டத்திற்கு எதிரான. தொடர்ச்சியாக எட்டாவது நாளாக சத்தியகிரக போராட்டம் புத்தளத்தில் உள்ள கொழும்பு முக திடலில் நடைபெற்று வருகிறது.இவ்வாறு பாகுபாடுகள் இன்றிய மக்கள் போராட்டம் , இலங்கைக்கு புதியதொரு முன்மாதிரியையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது […]

Voices Movement’s discussion about Ampara Riot

70 நாட்கள் கடந்த பிறகும் அம்பாரை இனவெறிக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களிற்கான நஷ்டஈட்டினை வழங்குவதிலும் வழக்குகளை துரிதப்படுத்தி 21 பேர் தவிர்ந்த ஏனையவர்களை கைது செய்ய வைப்பதிலும் அரச இயந்திரத்தினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் அசமந்த போக்குகள் தொடர்ந்து நீடித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் வியூகங்களை வகுப்பதற்கான கலந்துரையாடலொன்றை குரல்கள் இயக்கம் கடந்த 2018.05.04 ஆம் திகதி இரவு நிந்தவூர் பெரிய ஜும்ஆப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் அம்பாறை பள்ளிவாயல் பிரதிநிதிகள், […]

Shanmuga Habaya Crisis -Field visit to Trincomalee

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் சென்ற வாரம் 5 முஸ்லீம் ஆசிரியைகள் தங்களின் கலாச்சார ஆடைகளை அணிந்து பாடசாலை செல்வதற்கு அதிபராலும் பாடசாலை நிர்வாகத்தினராலும் தடைவிதிக்கப்பட்டதையும் அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து வெளிப்படையாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட ஆசிரியைகளைச் சந்திப்பதற்காகவும், துல்லியமான தகவல்களைத் திரட்டுவதற்காகவும் குரல்கள் இயக்கம் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்தது. குரல்கள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சப்ரி,சட்டத்தரணிகளான முஹைமின் காலித்,ஹஸ்ஸான் ருஷ்தி […]

Media Statement on Kandy Riot

2018.03.12 கடந்த சில வருடங்களாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரங்களும் திட்டமிட்ட வன்முறைகளும் சில பேரினவாத இனவாத குழுக்களால் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. முஸ்லிம்களின் கலாச்சார விடயங்கள், மத ஸ்தாபனங்கள், பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் இருப்பு என்பன இந்த இனவாத குழுக்களின் இலக்குகளாக இருந்து வந்திருக்கிறன. தொடர்ச்சியான இனவாத செயல்பாடுகளின் ஒருபகுதியாக சென்ற பெப்ரவரி மாதம் 26ம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாரையில் முஸ்லீம் உணவகங்களில் சிங்களவர்கள் கர்ப்பம் தரிப்பதைத் தடுப்பதற்கான மருந்துகள் கலக்கப்படுகின்றன […]

Kandy Riot – Field visit to Kandy district

கண்டி கலவரைத்தைத் தொடர்ந்து கள ஆய்வுகளுக்காக குரல்கள் இயக்கத்தின் ஆய்வுக்குழுவினர் சென்ற 10ம் திகதி சனிக்கிழமை கண்டிக்கு இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டனர். குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள்,இழப்பீடு அளவிடும் பொறியிலாளர்கள், புகைப் படப்பிடிப்பாளர்கள் மற்றும் கள ஆய்வாளர்களைக் கொண்ட குழு பாதிக்கப்பட்ட இடங்களான திகண,அக்குறணை,கடுகஸ்தொட போன்ற பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தகவல்களைத் திரட்டியதோடு பாதிக்கப்பட்ட மக்களோடும் கலந்துரையாடினர். பொலீசில் முறைப்பாடு செய்வது,அவற்றின் பிரதிகளைப் பெறுவது,முறைப்பாடு செய்வதற்கான வழிகாட்டல்கள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று 2018-03-11 ஞாயிறன்று திகண […]