Interim Report – Research team appointed

இடைக்கால யாப்பறிக்கை மீதான விவாதம்
பாராளுமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த உத்தேச யாப்பறிக்கையின் மீதான தமது நிலைப்பாடு என்ன என்பது பற்றிய தெளிவு வழமைபோல் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் இல்லை.

நாட்டின் மீயுயர் சட்டமான யாப்பினால் ஆளப்படுகின்றவர்கள் என்ற ரீதியில் உத்தேச யாப்பறிக்கையில் உள்ள விடயங்கள் சம்பந்தமாக அறிவூட்டப்படவேண்டியவர்கள் மக்கள். அறீவூட்டவேண்டியவர்கள் அரசியல்வாதிகள்.

இன்று அரசங்கம் முயன்று கொண்டிருக்கும் உத்தேச அரசியல் யாப்பறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் என்ன,அவை எவ்வாறான பாதிப்புகளை அல்லது நன்மைகளை முஸ்லிம் சமூகத்திற்கு கொண்டுவரும், இந்த யாப்பு விவகாரத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், முஸ்லிம் அரசியல்வாதிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவது ஒரு சிவில் அமைப்பு என்ற ரீதியில் குரல்கள் அமைப்பின் மீது கடமையாகிறது.

அதனடிப்படையில் குரல்கள் இயக்கம் ‘இடைக்கால யாப்பறிக்கைக்கான ஆய்வுக்குழுவை” இன்று நியமித்திருக்கிறது.

எமது ஆய்வுக்குழு இடைக்கால யாப்பறிக்கையை ஆய்வு செய்து அதன் சாதக பாதகங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதோடு, முஸ்லிம் அரசியல்வாதிகள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் பிரேரிக்க இருக்கிறது.இறுதியில் இடைக்கால யாப்பறிக்கை மீதான முஸ்லிம்களின் நிலைப்பாட்டை அறிக்கையாக வெளியிடவுமிருக்கிறது.

இந்தத் துறையில் ஆர்வமிருக்கின்ற கட்சி சாராத சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் எம்மோடு சேர்ந்து பணியாற்ற விரும்பினால் எம்மை உள்பெட்டியில் தொடர்பு கொள்ளலாம்.

no replies

Leave your comment