Field visit to Gintota

 

 

 

ஜிந்தோட்டை இனக்கலவரத்தைத் தொடர்ந்து குரல்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் விபவரங்களைத் திரட்டுவதற்காகவும்,பாதிக்கப்பட்டவர்களின் நேரடிச் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் சென்ற ஞாயிறு (2017.11.27) ஜிந்தோட்டைக்கு விஜயம் செய்தனர்.

குரல்கள் இயக்கத்தின் உறுப்பினர்களான சட்டத்தரணி றதீப் அஹமட் மற்றும் ஊடகவியலாளர் றிஸ்வான் சேகு முஹைதீன் ஆகியோர் கள விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை குரல்கள் இயக்கம் தனித்தனியே சந்தித்ததோடு அவர்களின் வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டன.சொத்திழப்பிற்கான மதிப்பீடுகளும் பெறப்பட்டன.

இந்த இனக்கலவரத்திற்குஅடிப்படைக்காரணமாக இருந்த ஒரு விபத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் தாய்,மற்றும் பாடசாலையில் சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்ட முஸ்லிம் மாணவர்களையும் குரல்கள் இயக்க உறுப்பினர்கள் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த கள விஜயத்தை ஜிந்தோட்டை அழிவு முகாமைத்துவ நிறுவனத்தின்(GDMO) அமைப்பாளர் றஸ்மி அவர்கள் ஒழுங்கமைத்திருந்தார்.

நடந்த விபரங்களையும்,சேதங்களையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை குரல்கள் இயக்கம் சர்வதேச சமுகத்திடம் கையளிக்க இருக்கிறது.

 

 

no replies

Leave your comment