Gintota unrest – Data collection and documentation

ஜிந்தோட்டையில் அமைதியின்மை நிலவுகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.ஒரு இனக்கலவரம் வெடிக்குமளவிற்கு நிலைமை சென்றதையும் நாம் அவதானிக்க முடியும்.இந்த நிகழ்ச்சித் தொடரில் பல முஸ்லிம்களின் உயிர்,உடமை,பொருள் என்பன பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு சிவில் அமைப்பு என்ற ரீதியில் ஜிந்தோட்டையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவகாரங்கள், உண்மையில் நடந்தது என்ன?,பாதிக்கப்பட்டோரின் விபரம், பாதிக்கப்பட்ட சொத்துக்களின் விபரம்,
பொலிஸாரின் நடத்தை,இரு சமூகத்தாரின் நடத்தைகள் சம்பந்தமான தகவல்களைத் திரட்டுவது ஒரு சிவில் அமைப்பு என்ற ரீதியில் எம்மீது கடமையாகிறது.

நடந்த சம்பவங்களை ஆவணப்படுத்தும் முகமாக குரல்கள் இயக்கத்திற்கு தகவல் தர விரும்புவர்கள் எம்மை பின்வரும் இலக்கத்தோடு தொடர்பு கொள்ள முடியும்.

தயாரிக்கப்படும் அறிக்கையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கும்,பொருத்தமான திணைக்களங்களின் கவனத்திற்கும் குரல்கள் இயக்கம் கொண்டுவர இருகின்றது.

இந்தத் தகவலை ஜிந்தோட்டையை அண்டிய பகுதிகளில் இருக்கும் எமது சகோதரர்களுக்கு
தெரியப்படுத்துங்கள்.

no replies

Leave your comment